ஏழை எளிய மக்களுக்கு 500 கிலோ அரிசி உட்பட சமையல் பொருள்களை வழங்கிய தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ்சார்

ஏழை எளிய மக்களுக்கு 500 கிலோ அரிசி உட்பட சமையல் பொருள்களை வழங்கிய தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ்சார் 


உலகத்தையை  அச்சுறுத்தும்  கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை,  மற்றும் சமூக இடைவெளியை  பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என  மத்திய, மாநில அரசுகள்  கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  144  ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்து 10 தினங்களுக்கு மேல்  ஆகியுள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சில நாட்கள்  பொதுமக்கள் பலர் அன்றாடம்  இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் நகரில் வலம் வந்ததை அவர்களுக்கு இது தவறு என்பதை உணர்த்தும் வகையில் 144 தடை உத்தரவு உள்ள நேரத்தில் தேவை இல்லாமல் வெளிய வரக்கூடாது எனவும் நூதன முறையில் தோப்பு காரணம் மற்றும் சில உடற்பயிற்சிகள் செய்ய சொல்லி   தண்டனை மட்டும் கொடுத்துவிட்டு  கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து காவல்துறையினர்  இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  


இரவு பகல் என்று பாராமல் காவல்துறை, மருத்துவ துறை, தூய்மை பணியாளர்கள் ஆகியோர்  இன்று மக்கள் நலன் காக்க பணியாற்றி வருகிறார்கள் என அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள் . ஆனால் தூத்துக்குடி மாவட்ட கவல்துறை தாங்கள் இரவு, பகல் என்று பாராமல் தனது குடும்பத்தை கூட பார்க்க செல்லாமல்  பணியாற்றி வரும் நிலையில், தங்களது  குடும்பத்தை காட்டிலும் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்க கூடாது என்ற மனித நேயத்தோடு,  தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி  பிரகாஷ் ஆலோசனையின் படி தூத்துக்குடி மத்திய பாகம் காவல்த்துறை 
ஆய்வாளர் ஜெய பிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் சங்கர், காமராஜ் மற்றும் காவல்துறையினர், 
 அன்றாடம் பிழைப்பு நடத்தி, வாழ்கை நடத்தி வந்த பல எளிய குடும்பத்தினர் வறுமையில் வாட
துவங்கியதால் அவர்களின் நலன் கருதி அவர்களை அடையாளம் கண்டு 
 இன்று 05/04/2020  மகிழ்ச்சிபுரம், 
கே.வி.கே.நகர், அண்னாநகர் உட்பட சில பகுதிகளில் 
உள்ள பொதுமக்களுக்கு 500 கிலோ அரிசி மற்றும்  பருப்பு ஆகிய சமையல் பொருட்களை வழங்கினார்கள் . 


காவல் துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிருபிக்கும் வகையில் இந்த இக்கட்டான கால சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட  காவல் துறையினர்  தங்களுக்கு உள்ள பணி சுமைகளை பொருட்படுத்தாமல்  மனித நேயத்தோடு ஏழை, எளியவர்களுக்கு  செய்யும் மகத்தான சேவையை அணைத்து தரப்பினராலும் பாராட்ட படுகிறது.


" alt="" aria-hidden="true" />